டிசம்பர் 28, 2024 சனிக்கிழமையன்று சுக்கிரன் மீண்டும் பெயர்ச்சி செய்கிறார். அதாவது இந்த பெயர்ச்சி இரட்டை பெயர்ச்சி. கும்ப ராசியில் இரவு 11:48 மணிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

இந்த சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

பணம்/ பொருளாதாரம்: நீங்கள் இத்தனை காலம் நிறைய கடன் வாங்கி இருந்தீர்கள்.. உங்களை பற்றி சொந்தக்காரர்கள் பேசிய போதெல்லாம்.. அவரை அவர் கடன்காரர் ஆச்சே.. ரொம்ப மோசம் ஆச்சே. அவர் கடன் வாங்கினால் திரும்பி கொடுக்க மாட்டாரே என்றெல்லாம் சொல்லியது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில்தான் உங்களின் பொருளாதாரம் மாறப்போகிறது. நீங்கள் பொருளாதார ரீதியாக நல்ல உயரத்திற்கு செல்லும் நேரம் வரும். நீங்கள் வாங்கிய கடனை எல்லாம் திரும்ப கொடுக்கலாம். அதோடு இல்லாமல்.. உங்களுக்கு லாட்டரி சீட்டு வெல்லும் வாய்ப்புகளும் உள்ளன.

கல்வி: கல்வி ரீதியாக மாணவ, மாணவியர்கள் சிக்கல் ஏற்படலாம். மாணவர்கள். தேர்வில் கவனமாக இருக்கவும். நீங்கள் தோல்வி அடையும் வாய்ப்பும் உள்ளது. காதலில் கவனம் செலுத்த வேண்டாம். உங்களுக்கு வேளையில் ப்ரோமோஷன் கிடைக்கும். பெரிய அளவில் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்பவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சினிமா துறை, பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள் வேலை ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.

குடும்ப வாழ்க்கை: ஆனால் குடும்பத்தில் பிரச்சனை வரும். டைவோர்ஸ் வரை கூட நிலைமை செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அவசரப்பட்டு மணம் முடிக்க வேண்டாம். யோசித்து திருமணம் செய்யுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போகலாம். அமைதியாக இருங்கள். முக்கியமாக உங்கள் கணவன், மனைவியுடன் சண்டை போட வேண்டாம். சண்டை வந்தாலும் அமைதியாக இருங்கள்.

ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தில் இனி பிரச்சனை வரலாம். ஆனால் அதை சமாளிக்க கூடிய பொருளாதாரம் இருக்கும். முதுகு வலி ஏற்படலாம். அதேபோல் அம்மை போடும் வாய்ப்புகள் உள்ளன. ஆண்களுக்கு மர்ம உறுப்பு ரீதியான பிரச்சனைகள் வரலாம். சிலருக்கு குடல் பிரச்சனைகள் வரலாம். விடாத வயிற்று வலி பிரச்சனைகள் கூட வரலாம். அதனால் கவனமாக இருக்கவும்

திருமணம்: ரிஷப ராசியினருக்கு காதல் கைகூடும். ஆனால் கல்யாணம் கைகூடாது. அதனால் கவனமாக இருக்கவும். பண வரவு இருக்கும் என்பதால் இப்போது சேர்த்து வைத்து இன்னொரு நாள் திருமணம் செய்து கொள்வது சரியான முடிவாக இருக்கும்.

பரிகாரம்: திட்டக்குடி முருகன் கோவிலுக்கு செல்வது நல்ல பலன் கொடுக்கும். சாமிக்கு மாலை கொடுத்து பூஜை செய்வது பலன் கொடுக்கும்.