2025 ஆம் ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். நவக்கிரகங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் ராகு, கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் தன் நிலைமையில் இருந்து மாற உள்ளது.
2025 ஆம் ஆண்டு நிகழவுள்ள கிரக மாற்றங்களை பொறுத்தே சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும்.
வரவிருக்கும் புத்தாண்டில் பல பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும் காரணத்தினால் அனைத்து ராசிகளும் சிறப்பான சூழ்நிலைகளை பெறவுள்ளனர். இதனால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட்டாலும் பல யோகங்கள் கிடைக்கக்கூடும்.
ஒரு சில ராசிகளுக்கு மட்டுமே மோசமான சூழ்நிலை இருந்தாலும் அதன் நிலை மாறுபடுகின்ற போது பலன்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அந்த வகையில் வரவிருக்கும் புத்தாண்டில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களும் எந்தெந்த விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பதனை நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியாயின் 2025 ஆம் ஆண்டு நிகழக்கூடிய முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சிகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு பிறந்தவுடன் முதல் மாதம் (ஜனவரி மாதம்) நான்காம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசிக்கு செல்வார். அதன் பின்னர் டிசம்பர் 23ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு வருவார். அத்துடன் 2025 ஆம் ஆண்டில் வரும் புதன் பெயர்ச்சி முடிவடைகிறது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் என அடுத்தடுத்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலவையான பலன்களை பெற வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் சனி மற்றும் ராகு சேர்ந்த 50 நாட்கள் பயணம் செய்யவார்கள். இதன் தாக்கம் ஒவ்வொரு ராசிகளின் வாழ்க்கையிலும் இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
1. சனி பெயர்ச்சி 2025
2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் மீன ராசிக்கு பயணம் செய்வார்.
2. குரு பெயர்ச்சி 2025
2025 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி ரிஷப ராசியில் இருக்கும் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார்.
3. ராகு கேது பெயர்ச்சி 2025
எதிர்வரும் மே 18ஆம் தேதி அன்று ராகு மற்றும் கேது இருவரும் தங்களது இடத்தை மாற்றினர். இதன்படி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் இடம்பெயர்ந்து பயணம் செய்வார்கள்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை சனி மற்றும் ராகு இருவரும் சேர்ந்து 50 நாட்கள் மீன ராசியில் சஞ்சாரம் செய்வார்கள். இப்படியாக மாற்றமடையவுள்ள கிரகங்கள் 12 ராசிகளின் பலன்களிலும் தாக்கம் செலுத்துவார்கள்.