டெல்லியில் காற்றின் தரம் இன்றைய நாளில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இதன்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு இன்று 488ஆக உயர்ந்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு 150ஆக இருக்கவேண்டிய நிலையில் இன்றைய தரக் குறியீடு இவ்வருடத்தில் மிக உயர்ந்த மட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் புற்றுநோய் போன்ற இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடிய பி.எம்.2.5 என்ற கொடிய துகள் பொருள்க்ள காற்றில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி மிக மோசமான காற்று மாசுபாட்டையும் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.