சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது வாஹிதா என்ற இளம் பெண் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். முத்துக்குமரன் தன்னை சந்தித்து பேசியதாகவும், தன்னிடம் அன்பாக பழகி,வீட்டிற்கு அழைத்து சென்று என்னை ஏமாற்றி விட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

பிக் பாஸ் முத்துக்குமரன்: அந்த பெண் வெளியிட்ட வீடியோவில், முத்துக்குமரன் என்னை வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்பாக காதலுடன் பேசினார். அந்த அன்பு, காதலுக்காகத்தான் நான் பல நாட்கள் ஏங்கிக்கொண்டு இருந்ததால் அவரின் அன்பு என்னை மாற்றிவிட்டது. வீட்டிற்குஅழைத்து சென்று எல்லா இடத்திலும் ஆயிரம் முத்தங்களை கொடுத்தார். உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொடமாட்டேன் என திருப்பி திருப்பி சொன்னார். தாலி கட்டுவேன் என்று அவர் சொன்னபோது நான் நம்பிவிட்டேன். நானும் அவரும் உடல் ரீதியாக இணைந்துவிட்டோம்

பெண் தற்கொலை முயற்சி: சிறு வயது முதலே அன்புக்காக ஏங்கியதாகவும், தனக்கு இப்படியொரு அன்பு கிடைத்தபோது அதை நிராகரிக்க முடியாமல் அந்த அன்பில் மயங்கி அவரை ஏற்றுக்கொண்டேன். அதே நேரத்தில், நடந்த விஷயத்திற்கு முத்துக்குமரனை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது என்றும், தன்னிடமும் தவறு இருக்கு. திருமணம் செய்து தாலி கட்டுவதாக ஒருவர் கூறியதை தான் எப்படி நம்பினேன் என்று தனக்கே தெரியவில்லை. இந்த மன உளைச்சலின் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஹிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Muthukumaran Netizens

ஏமாற்றலாமா: இதனிடையே, வாஹிதா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரனை விமர்சித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் முத்துக்குமரன் சோக்கு கேக்குதா என்றும், பெண்ணிய பேசும் ஆண் இப்படி செய்யலாமா? நாலு செவுத்துக்குள் ஏமாற்றுவது தான் பெரியாரிசமா? என கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். எனினும், இளம் பெண் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முத்துக்குமரனின் தரப்பு விளக்கம் என்ன என்பது தற்போது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.