கடந்த 13 ஆம் தேதி தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் அனைத்து தரப்பினருமிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து தான் வருகின்றனர்.
அதுமட்டுமின்றி 50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட பல இடங்களில் அதிக வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியாகி எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் அங்கு தற்போது வரை A$ 610,540 வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் இப்படம் 1 மில்லியனை எட்டிவிடும் என கூறப்படுகிறது.