இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத நடிகர் அஜித் குறித்து சமூவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல மெலடி மற்றும் கானா பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த தேவா, சமீபத்தில் மரணமடைந்தது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத நடிகர் அஜித் குறித்து சமூவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
90-களில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இசையமைப்பாளர் தேவா. தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படும் இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, விஜய் - அஜித் இருவரின் ஆரம்பகால படங்களுக்கு தேவாவின் இசையும், பாடல்களும் பெரிய வெற்றியை கொடுத்தது.
பல முன்னணி நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த தேவா, கடைசியாக கடந்த ஜூன் மாதம் வெளியான சாருகேசி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனிடையே கடந்த அக்டோபர் 17-ந் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக தேவா மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பேரிழப்பாக மாறிய நிலையில், அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். மேலும் நேரிலும் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் என பலரும் தேவாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நடிகர் அஜித், அஞ்சலி செலுத்த வரவில்லை அதேபோல் தேவா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றாலும், நெட்டிசன்கள், அஜித்தின் இந்த நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அஜித்துக்கு பெரிய ஹிட்டாக அமைந்த ஆசை படம் தொடங்கி, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, நேசம், பகைவன், ரெட்டைஜடை வயசு, உன்னைத் தேடி, வாலி, ஆனந்த பூங்காற்றே, முகவரி, சிட்டிசன், ரெட் என 10 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அஜித் நடித்த ஆரம்பக்கட்ட படங்கள் வெற்றி பெற தேவாவின் இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.
அப்படி இருக்கும்போது, தேவா மறைவுக்கு நேரில் வரமுடியவில்லை என்றாலும் இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் தனது ரேசிங்கிற்கு ஆதரவு கோரி அஜித் வீடியோ வெளியிட்டிருந்ததை குறிப்பிட்டு பேசி வரும் ரசிகர்கள், தனது ரேசிங்கிற்காக வீடியோ வெளியிடும் அஜித், ஒரு இரங்கல் கூட தெரிவிக்க முடியவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்புவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே, கேப்டன் விஜயகாந்த் மரணத்தின்போதும் அஜித் எவ்வித இரங்கல் அறிக்கையும் வெளியிடாதது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் ராஜசேகர் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஒரு சிலரைத் தவிர, ஆரம்பத்தில் இருந்தே துக்க நிகழ்வுகளில் இருந்து ஏ.கே விலகி வருகிறார். தனது சொந்த அப்பா மற்றும் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு திரையுலகினர் வருவதையும் அவர் விரும்பவில்லை. அது அவரது சித்தாந்தம். ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில், ஜீவா எப்படி வேறொருவரின் கருத்தையோ அல்லது சில விஷயங்களில் லட்சியவாதியையோ மதிக்கத் தவறிவிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. விஜய்யுடனான நட்பை அஜித் வெளிப்படையாக அறிவித்ததால் தான் இவை அனைத்தும் வெளிப்படுகின்றன. அதற்கு மேல் ஒன்றும் குறையவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
