1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன் அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

1982-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தாவணி கனவுகள். 4 தங்கைகளுக்கு அண்ணனான ஹீரோ, அவர்களை எப்படி முன்னேற்றி கொண்டு செல்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சிவாஜி படப்பிடிப்பின் முதல் நாளில் நடந்துகொண்ட விதம் குறித்து பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன் அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். நடிப்புக்கு முக்கியத்துவம் அளித்து எந்த கேரக்டராக இருந்தாலும், அதற்காக தன்னையே மாற்றிக்கொள்ளும் நடிகராக அறியப்பட்ட சிவாஜி கணேசன், பல முன்னணி இயக்குனர்களில் இயக்கத்தில் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி கணேசன், ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் உருவான படம் தான் தாவணி கனவுகள். 1982-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி சைக்கிள் கடை நடத்தும் கேப்டன் என்ற கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக நடித்த பாக்யராஜ், படத்தை இயக்கி தயாரித்திருந்தார், இயக்குனர் பாரதிராஜா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

பொதுவாக தனது படங்களின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிடும் சிவாஜி கணேசன், அன்றைய காட்சிகான வசனத்தை முன்கூட்டியே சொன்னால் தான் அதற்கு தகுந்தார்போல் தயாராகி நடிப்பார். ஆனால், இந்த படத்தில் முதல் நாள் முதல் காட்சிக்காக மிலிட்டா உடை அணிந்து தயாராக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு என்ன வசனம், என்ன காட்சி எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் ஒரு உதவி இயக்குனரை அழைத்து வசனம் என்ன எனக்கு பேப்பர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். 

அந்த உதவி இயக்குனர் இதோ எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வரவில்லை. அடுத்து ஒருவரை அழைத்து இப்படி சொல்ல, இவரும் போய் வரவில்லை. இதனால் கடுப்பான சிவாஜி, பாக்யராஜூவிடம் சென்று, என்ன வசனம கேட்டால் ஒருத்தனும் கொடுக்க மாட்ரானுங்க என்று கேட்க, அதற்கு பாக்யராஜ் வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க, வனமே இல்லை அண்ணே என்று சொல்ல, சிவாஜி ஷாக் ஆகியுள்ளார், பிறகு எப்படி எடுப்ப என்று கேட்க, ஒரு மகா நடிகன் நீங்க நான் சொல்ல சொல்ல அப்படியே பேசிடுங்க என்று கூறியுள்ளார்.