இந்த உலகத்தில் அணு வெடிப்பு நிலநடுக்கம் சுனாமி என எவ்வளவு பெரிய பேரழிவு வந்தாலும் அசராமல் பிழைத்துக் கொள்ளும் ஒரு உயிரினம் உள்ளது அது தான் கரப்பான் பூச்சி.
அதாவது, எந்த பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்து வாழக்கூடிய திறன் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். டைனோசர்கள் பூமிக்கு வருவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே 32 ஆண்டுகளாக இவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. அதைப்பற்றி பார்ப்போம்.
2026 ஆம் ஆண்டு புதிய தொடக்கத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஓர் பதற்றம், புயல், பூகம்பம் என இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது நடந்து வருகிறது.

அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பாக கூட நேபாளம் திபெத் எல்லையில் பனிப்பாறைகள் சரிந்து திடீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.
பேரழிவில் உயிர் வாழும் உயிரினம்:
நேபாளத்தில் கொத்துக்கொத்தாக உயிரிழந்த மனிதர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த பகுதிகயில் மீட்டு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில், போர் பனிமழைசரிவு, இயற்கை பேரழிவுகள் என இத்தனையும் தாண்டி இவ்வளவு காலம் சிறிய பூச்சி ஒன்று அழியாமல் பிழைத்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் நம் அன்றாட வாழ்க்கையில் பயணிக்க கூடிய கரப்பான் பூச்சி.

எதையும் செரிக்கும் வயிறு:
கரப்பான் பூச்சிகள் உணவுகளை பற்றி கவலைப்படுவதே கிடையாது. சாதாரண உணவுகள் கிடைக்காத போதும் மர பட்டை, காகிதம், பசைகள், சோப்பு, முடி, தோல் பொருட்கள் துணி என எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு உயிர் வாழும். இவற்றின் வயிற்றில் இருக்கக்கூடிய சிறப்பு பாக்டீரியாக்கள் இந்த விசித்திர பொருட்களை செரித்து சத்துக்களாக மாற்றுகிறது.
அதனால் ஒரு சாதாரண கரப்பான் பூச்சி தண்ணீர் இல்லாமல் ஒரு வாரமும். உணவே இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேலாக உயிர் வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, தகுந்த சூழலுக்கு ஏற்ப உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை குறைத்து ஆற்றலை சேமித்துக் கொள்ளும் என்று சொல்கிறார்கள்.
தலை போனாலும் பிழைக்கும்:
கரப்பான் பூச்சியை பொருத்தவரை தலை துண்டிக்கப்பட்ட பிறகும் கூட ஒரு கரப்பான் பூச்சியால் ஒரு வாரம் வரை உயிர் வாழ முடியும் என்று சொல்கிறார்கள். மனிதர்களைப் போல இவை மூக்கு அல்லது வாயால் மூச்சு விடுவதில்லை.
உடலில் பக்கவாட்டில் உள்ள சிறிய துளைகள் வழியாகவே ஆக்ஸிஜன் சுவாசிக்கின்றனர். இது தலை இல்லாததால் தண்ணீர் குடிக்க முடியாமல் ஏற்படக்கூடிய நீர் சத்து குறைபாட்டால் மட்டுமே இறுதியில் இறந்து போகிறது.

கதிர் வீச்சை தாங்கும் சக்தி:
பூமியில் அணு ஆயுதப் போர் வந்தாலும் கூட கரப்பான் பூச்சி மட்டும் மிஞ்சும் என ஒரு பேச்சு உண்டு. அதாவது, இவை மனிதர்களை விட 15 மடங்கு அணுக்கதிர்வீச்சை தாங்கக்கூடிய சக்தி பெற்றதாம். இவற்றின் செல்லுலார் பிரிவு மிக மெதுவாக நடப்பதால் கதிர்வீழ்ச்சியால் இவற்றின் dna அவ்வளவு எளிதில் பாதிக்கப்படுவதில்லை.
நெகிழும் உடல் அமைப்பு:
இவற்றினுடைய வெளிச்சட்டகம் மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டது. இவை தன் உடலில் 25% வரை குறைத்துக் கொண்டு மிகவும் குறுகிய சந்துக்கள், சுவர்களின் விரிசல்களில் கூட லாபகமாக ஒளிந்து கொள்ளுமாம். நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து வாழும் வகையில் இவை தங்கள் மரபணுக்களை மிக வேகமாக மாற்றிக் கொள்கிறது.
அதைவிட, முக்கியமாக ஒரு தலைமுறை கொல்லும் விஷத்திற்கு அடுத்த தலைமுறைப் பூச்சிகள் எதிர்ப்பு திறனுடனே பிறக்கின்றனவாம். இயற்கையின் பரிணாம வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த கரப்பான் பூச்சி என்கிறார்கள்.
மனிதர்கள் பூமிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழத் தொடங்கிய இந்த கரப்பான் பூச்சி மனித இனம் அழிந்த பிறகும் கூட பூமியில் தொடர்ந்து வாழ்ந்து வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
