குருவும் சுக்கிரனும் இணைவதால் சனி பகவானின் தாக்கம் எந்த ராசிகள் மீது இருந்த அந்த ராசிகளுக்கு தாக்கம் இல்லாமல் போக போகிறது. அதாவது சனியின் தாக்கம் குறையப்போகிறது.

சனியின் தாக்கம் குறையும்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகச்சேர்க்கை நடக்கும் போதும் அதற்குரிய பலன் 12 ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களில் சனி பகவான் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றார்.
இவருடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு தாக்கத்தை கொடுக்கும்.
2026 ஜூன் 9 ஆம் தேதி கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணையும் அரிய கூட்டணி நடைபெறுகின்றது. இந்த சேர்க்கை சனி பகவான் சில ராசிகள் மேல் நடத்தும் தாக்கத்தை குறைக்கும்.

குரு ஞானம், செல்வம், வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் காரகன். சுக்கிரன் ஆடம்பரம், செல்வாக்கு, காதல், மகிழ்ச்சி மற்றும் பொருளாதார வளத்தின் காரகன்.
இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு பல ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சக்திவாய்ந்த யோகமாக பார்க்கப்படுகிறது.
இது எந்த ராசிகளுக்கு நன்மையை அள்ளிக்கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

கடகம்
- சனி ஏற்படுத்திய தடைகள் விலகும்.
- கடந்த சில ஆண்டுகளாக சனியின் தாக்கத்தால் வந்த மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், பண நெருக்கடி மற்றும் தொழில் தடைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.
- வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
- கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
- பண வரவு அதிகரித்து சேமிப்பு உருவாகும்.
- உடல்நலத்தில் இருந்த சோர்வு மற்றும் சிறிய பிரச்சினைகள் குறையும்.
மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு-சுக்கிரன் கூட்டணி புதிய திருப்புமுனையை உருவாக்கப்போகிறது.
- கடின உழைப்பிற்கு இதுவரை கிடைக்காத பலன் கிடைக்கும்.
- சனியின் அழுத்தம் குறைந்து மன நிம்மதி அதிகரிக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
- நிலம், வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
- குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும்.
- இன்னும் பல நன்மைகள் உங்களுக்கு அள்ளி கிடைக்கும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு-சுக்கிரன் சேர்க்கை மிகவும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
- சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக இருப்பதால் அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கும்.
- மனவேதனை, பொருளாதார சிக்கல்கள் மற்றும் உறவு பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் அமையும்.
- காதல் உறவுகள் வலுப்பெறும்.
- குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும்.
மகரம்
- பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைக்கும் நேரம் இது.
- வேலை மற்றும் தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
- பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் அதிகாரம் கிடைக்கும்.
- அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
- தொழில் முனைவோர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.
- பொருளாதார நிலை வலுப்பெறும்.
