தமிழா தமிழா நிகழ்ச்சியில் நகரத்து வேலைக்குச் செல்ல ஆசைப்படும் பிள்ளைகள் மற்றும் மறுக்கும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் நகரத்து வேலைக்குச் செல்ல ஆசைப்படும் பிள்ளைகள் மற்றும் மறுக்கும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் பிள்ளைகள் வெளியூருக்கு சென்று வேலை செய்ய ஆசைப்படும் நிலையில், பெற்றோர்கள் தற்போதைய சூழ்நிலையை நினைத்து அவர்களை அனுப்புறதற்கு பயப்படுகின்றனர்.
பெற்றோர்களின் பயத்தினை அவதானித்த பிள்ளைகள் நான் நிலாவிற்கா போறேன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி தொகுப்பாளரும் சரமாரியாக அவர்களை கேள்வி கேட்டுள்ளார்.
