பொதுவாக பெண்கள் என்றால் உடலில் எந்த ஒரு பாகத்திலும் முடி வைத்திருப்பதை விரும்பாதவர்கள் என்றே சொல்லலாம்.
நமது முகத்தில் மெல்லிய முடி வளர்வது பொதுவான விஷயமாகும். இந்த முடியை நாம் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யும் போதும் சிரமப்பட வேண்ணடிய நிலை ஏற்படும்.
இதை எத்தனை முறை நீக்கினாலும் அதே இடத்தில் முடி திரும்பவும் வளரும். இவ்வாறு இருக்கும் முடியை எப்படி எளிமையாக அகற்ற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் முடியை ஷேவிங் செய்யும் போது மிகவும் சுத்தமான, கூர்மையான ரேசரை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள்.
அதே நேரத்தில் முடி வளரக்கூடிய அதே திசையில் நீங்கள் ஷேவிங் செய்ய வேண்டும். இது எரிச்சலை தவிர்க்க உதவுவதோடு உட்புறமாக வளரக்கூடிய முடிகளையும் அகற்றும்.
இதனால் உண்டாகக்கூடிய விளைவுகள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இருக்கும். எனவே இந்த வழிமுறையை நீங்கள் பயமின்றி செய்யலாம்.
இது தவிர நீங்கள் கடைகளில் விற்கப்படும் ஹேர் ரிமூவல் கிரீம்களை வாங்கி உபயோகிக்கலாம். இந்த கிரீமில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் முடி வளர்வதற்கான புரதத்தை இல்லாமல் செய்து முடி வளர்ச்சியை முற்றாக இல்லாமல் செய்யும்.
அலர்ஜி இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த கிரீம்களை முகத்தில் பயன்படுத்தும் பொழுது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதை முடி உள்ள பகுதியில் தடவி ப்ராடக்ட்டின் பேக்கேஜிங்கில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.