2025-ல் உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பேரழிவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருந்த வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் மற்றும் வெற்றியைத் தரும் என்றும் கூறியிருக்கிறார். எந்தெந்த ராசிக்காரர்கள் பாபா வாங்கா கணிப்பு படி 2026-ல் அளவில்லாத செல்வத்தை அடைவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
வரப்போகிற 2026-ல் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாகக் கை கொடுக்கும். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். அவர்களின் மன உறுதி, கடின உழைப்பு மற்றும் புதிய திட்டங்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களைக் கொண்டு வரும். இந்த ஆண்டு பெரும் சாதனைகள் மற்றும் அதிர்ஷ்டமும் தேடிவரும் நாளாக இருக்கும், குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான வருடமாக இருக்கும்.

ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்கு 2026 ஆம் ஆண்டு நிதிரீதியாக மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் அவர்கள் அனுபவித்த அனைத்து போராட்டங்களும் இந்த ஆண்டு முடிவுக்கு வரும், அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இறுதியாக இந்த ஆண்டு அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்திலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகும் அவர்களின் வங்கி கணக்கில் அபரிமிதமான வளர்ச்சியுடன், அவர்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 2026 இந்த ஆண்டு அவர்களுக்கு அனைத்து நன்மைகளும் தேடிவரும் நாளாக இருக்கும்.

மிதுனம்
பாபா வாங்கா கணிப்பு படி கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை 2026-ல் பிரகாசமாக இருக்கபோகிறது. அவர்களின் புத்திசாலித்தனமான திட்டமிடலும், செயல்பாடுகளும் 2026-ல் அவர்களுக்கு அபரிமிதமான நிதிப் பலன்களைப் பெற்றுத் தரும். தொழில் வாழ்க்கை மற்றும் சமூகத் தொடர்புகள் விரிவடையும். புதிய முயற்சிகளைத் தொடங்க அல்லது முதலீடுகளைச் செய்ய இது ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும். அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் குணமும் கூர்மையான சிந்தனையும் திடீர் ஆதாயங்களுக்கு வழிவகுக்கும்.

சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், 2026 ஆம் ஆண்டில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள். ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கோ அல்லது அவர்களின் தற்போதைய வேலையில் உயர் பதவிக்குச் செல்வதற்கோ வாய்ப்புகள் தேடிவரும். அவர்களின் தலைமைப் பண்புகளும் தன்னம்பிக்கையும் நிதி வெற்றிக்கு வழிவகுக்கும். 2026-ல் அவர்களின் தேடிவரும் பல சாதகமான வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையின் திசையை முழுமையாக மாற்றக்கூடும்.

