பொதுவாக அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில்  நெத்திலி கருவாட்டு குழப்பு முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது. அதுவும் மசாலாாக்களை அரைத்து செய்யப்படும் குழம்பு என்றால் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

அதிலும் நெத்திலி கருவாட்டு குழப்பு என்றாலே அதன் வாசனையும் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

நெத்திலி கருவாட்டுல சம்பல் கிரேவியா? மலேசியன் பாணியில் இப்படி செய்து பாருங்க | Malaysian Style Nethili Curry Ikan Bilis Recipe

நெத்திலி கருவாட்டினை வைத்து மலேசியாவில் பிரபலமாக அறியப்படும் இகான் பிலிஸ் சம்பல் கிரேவியை மலேசியன் பாணியில் எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நெத்திலி கருவாடு- 250 கிராம்

வெல்லம் - சிறிதளவு

உப்பு- தேவையான அளவு 

காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5

சின்ன வெங்காயம் - 10

பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

வெள்ளை பூண்டு - 4

சமையல் எண்ணெய் - தேவையான அளவு

புளி - ஒரு எலுமிச்சை அளவு

நெத்திலி கருவாட்டுல சம்பல் கிரேவியா? மலேசியன் பாணியில் இப்படி செய்து பாருங்க | Malaysian Style Nethili Curry Ikan Bilis Recipe

செய்முறை

முதலில் நெத்திலி கருவாட்டை சுடுதண்ணீரில் 10 நிமிடங்களுக்கு நன்றாக  ஊறவிட வேண்டும். அதே நேரம் காய்ந்த மிளகாயை எடுத்து 10 நிமிடங்களுக்கு குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

நெத்திலி கருவாட்டுல சம்பல் கிரேவியா? மலேசியன் பாணியில் இப்படி செய்து பாருங்க | Malaysian Style Nethili Curry Ikan Bilis Recipe

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சுடுதண்ணீர் ஊற வைத்த நெத்தலி கருவாட்டினை போட்டு மொறுமொறுப்பாக வரும் வரை‌ நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் அரைத்து வைத்த பேஸ்ட்டை அதில் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் புளிக்கரைசல் மற்றும் கொஞ்சம் வெல்லம் சேர்த்து விட்டு நன்றாக கிளறிவிட்டு இறுதியாக பொரித்து வைத்த நெத்தலி கருவாடு மற்றும் உப்பினை சேர்த்து பலந்துவிட்டால் அவ்வளவு தான் இகான் பிலிஸ் சம்பல் கிரேவி தயார்.