கழுத்தில் இருக்கும் கருமையை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வழிமுறைகளை பதிவில் பார்க்கலாம்.

அழகாக இருக்க வேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள். பலரும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விதவிதமான விலையுயர்ந்த க்ரீம்கள், ஃபேஷ்பேக்குகள், ஃபேஸ் மாஸ்குகளை போட்டு தஙகளை பளபளப்பாக காட்டி கொள்வார்கள்.

ஆனால் பலரும் செய்யும் ஒரு தவறு தங்கள் கழுத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முகத்திற்கு கொடுக்க மாட்டார்கள். இதனால் கழுத்தை சுற்றி அடர்த்தியான கருப்பு வரும். 

இது தவிர உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் எதிர்ப்பு போன்ற பல காரணங்களாலும் கழுத்து கருப்பாக இருக்கும். முகம் அழகாக இருந்து கழுத்து மட்டும் கருப்பாக இருந்தால் நமக்கே நம்மை பார்க்க பிடிக்காது. அது மொத்த அழகையும் கெடுத்து விடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கழுத்து கருமையை நிரந்தரமாக நீக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

கழுத்தில் அடர் கருப்பா? தயிருடன் இதை சேர்த்து பூசுங்க 3நாளில் மறையும் | Home Remedies To Remove Neck Darkness Beauty

கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு - இந்த இரண்டு பொருட்களும் கழுத்தில் இருக்கும் கருமையை நிரந்தரமாக நீக்க உதவுகிறது.

இதற்கு 1 ஸ்பூன் கடலைமாவுடன் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பின்னர் குளிர்ந்து நீரால் கழுத்தை கழுவ வேண்டும்.

வாரத்திற்கு 2-3 முறை இப்படி போட்டு வந்தால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். கழுத்தில் அடர்த்தியாக இருக்கும் கருமையும் மறையும். 

கழுத்தில் அடர் கருப்பா? தயிருடன் இதை சேர்த்து பூசுங்க 3நாளில் மறையும் | Home Remedies To Remove Neck Darkness Beauty

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு - இதற்கு தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடலாம்.

இப்படி கருமை நீங்கும் வரை செய்யுங்கள். நிரந்தரமாக கருமை வராது. 

எலுமிச்சை சாறு - ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பஞ்சை அதில் நனைத்து கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் கழுத்தை கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்தால் போதும். கழுத்து கருமை முற்றிலும் நீங்கிவிடும்.