தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தொகுப்பாளினி அர்ச்சனா போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து அடுத்ததாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்காக அவர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹோட்டல் அறையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்ற குரலோடு அலறியபடி ரிசப்ஷனுக்கு ஓடி வந்துள்ளார்.

என்னை யாரோ கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என கூறியுள்ளார். இது மிகவும் பாதுகாப்பான ஹோட்டல் இங்கே அப்படி நடக்க வாய்ப்பில்லை என ரிசப்ஷனில் இருந்தவர்கள் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை சுசித்ரா.

அதன் பின்னர் ஹோட்டல் நிர்வாகம் விஜய் டிவிக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து சுசித்ராவை சமாதானப்படுத்தி அறைக்குள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் மனநல மருத்துவர் அவருக்கு கவுன்சிலிங் அளித்ததாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் சுசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இவ்வாறு செய்தது தொலைக்காட்சி சானலை கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.