குக் வித் கோமாளியில் இறுதியாக நடந்த எலிமினேஷன் சுற்றில் பவித்ரா வெளியேறியுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது பேசிய வார்த்தைகள் தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது.

டிவிட்டரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டிரெண்ட் ஆகி வருகிறது. பவித்ரா கூறும்போது "எனது புகழுக்கு காரணம் புகழ்தான்.

ஆரம்பத்தில் புகழுடன் ஜோடி சேர்ந்த பொண்ணு என்ற அடையாளத்தை கொடுத்து, இன்று பவித்ரா என்றால் ஓரளவுக்கு தெரிகிறது என்றால் அதற்கு காரணம் புகழ் தான்.

இதை நான் 200% நிச்சயமாகச் சொல்வேன். இது என்னுடைய குடும்பமாக மாறிவிட்டது" என்று கூறினார்.

கண்கலங்கிய புகழ் "இதற்கு காரணம் புகழ் தான் என்று பேசவே ஒருவருக்கு பெரிய மனது வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது பவித்ரா. இதற்காகவே நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வருவீர்கள்" என்று சொல்லி கண் கலங்குகிறார்.

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துவிட்டது.