தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அதுகுறித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் திடீரென டிரண்டாக தொடங்கியுள்ளது.
அதாவது தல அஜித் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கு திடீரென அவரை ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனையடுத்து அஜித் தரையில் அமர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி மேன் ஆப் சிம்பிளிசிட்டி என கொண்டாடி வருகின்றனர்.
Good morning, Dear Thala Blood's
— AJITH FANS KERALA (@AfcKerala) October 13, 2020
Man of simplicity 😍👌
Ajith sir with fans 👥#Valimai 🔥 || #ThalaAjith pic.twitter.com/87IeWsHIPG