பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு நினைப்பவர்களுக்கு சிறந்த வழி, சில வெள்ளை உணவுகளை ஒதுக்கி வைப்பதாகும்.
கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையவில்லையா? அப்படியாயின் நீங்கள் தவறான உணவு பழக்கத்தை கடைபிடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
டயட்டில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் வெள்ளை நிற உணவுகளை சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மைதா ஊட்டசத்து இல்லாத காப்போஹைட்ரேட் நிறைந்த மாவு. ஆகையால் மைதாவால் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, பிரட்டுகள் என அனைத்துமே, நார்ச்சத்து புரதம் எதுவுமே இல்லாதவை. இது போன்ற உணவுகளை சேர்த்து கொள்வதில் கொஞ்சம் கவனம் தேவை.
அந்த வகையில் எடை குறைப்பிற்கு தேவையான உணவு பட்டியல் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. முதல் நாள்:
காலை - டீ, காபி, பால் ஓரங்கட்டி விட்டு வெள்ளரி தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் திரவ உணவுகள் ஏதாவது சாப்பிடலாம்.
மதியம் - 1 கப் பருப்பு அல்லது 1 கப் காய்கறிகள்.
இரவு- ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன் அதிகமான பசியென்றால் மோர் குடிக்கலாம்.
2. இரண்டாவது நாள்
காலை - 2 சோளமாவு தோசை, அரை கப் தயிர்.
மதியம் - 1கப் அளவு பருப்பு, காய்கறி மற்றும் ஒரு சப்பாத்தி.
இரவு - இரண்டு சப்பாத்தி மட்டும்.
3. மூன்றாவது நாள்
காலை - 1 கப் அளவான பழங்கள்
மதிய உணவு- பன்னீருடன் காய்கறிகள்
இரவு - 2 சப்பாத்தி
4. நான்காம் நாள்
காலை - 2 ஆம்லேட் மட்டும்.
மதியம் - ஒரு கப் காய்கறி மட்டும்.
இரவு - அரை கப் சாதம்
5. ஐந்தாவது நாள்
காலை - காய்கறி உப்புமா,
மதியம் - பன்னீர் சேர்க்கப்பட்ட சப்பாத்தி
இரவு - ஒரு சப்பாத்தி மட்டும்.
முக்கிய குறிப்பு
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை பார்க்கவும்.