பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட பாபா வாங்கா கணிப்பில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தீர்க்கதரிசியான பாபா வாங்கா "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என அழைக்கப்படுகிறார்.

இவர், தன்னுடைய யதார்த்தமான கணிப்புக்களால் நடக்கவிருப்பதை முன்னரே கூறி எதிர்கால சந்ததியினரையும் கவர்ந்துள்ளார்.

கண் தெரியாமல் வாழ்ந்த பாபா வாங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும் தரிசனங்களால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அந்த வகையில், இன்னும் 1 மாதத்தில் பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டில் வரவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து பாபா வாங்கா கூறிய விடயங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

2026-ல் உலகம் தலைகீழாகுமா? அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா கணிப்பு | Baba Vanga Dangerous 2026 Predictions

 1. செயற்கை நுண்ணறிவால் வரும் ஆபத்து

தற்போது செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதன் தாக்கம் பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டில் கடும் முன்னேற்றத்தை கொண்டிருக்கும். மனித கட்டுப்பாட்டை கடந்து நமது அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும். இதனை பாபா வாங்கா அவருடைய கணிப்பில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

அந்த வகையில், AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி காண்பதினால் அவரது கணிப்பில், “ AI நெறிமுறைகள், பாதுகாப்பு மற்றும் அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்களின் பாவனை அதிகமாக மனிதர்களுக்கு வேலையில்லாமல் செல்லும். இதனால் பஞ்சம் வரவும் வாய்ப்பு உள்ளது..” என்றும் கூறப்பட்டுள்ளது.  

2026-ல் உலகம் தலைகீழாகுமா? அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா கணிப்பு | Baba Vanga Dangerous 2026 Predictions

2. ஏலியன் வருகை

ஆரம்பத்தில் இருந்து பாபா வாங்கா கணிப்பில் ஏலியன் பூமி வருகை என்ற ஒரு விடயம் பேசப்பட்டு வருகிறது. இதன்படி, 2026 நவம்பர் மாதம் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்புகள் வலுப்படுத்தப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் ஒரு பெரிய விண்கலம் பற்றியும் கணிப்பில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம், மனிதர்களிடையே ஆர்வத்தையும், பயத்தையும் தூண்டி வேற்றுகிரகங்களில் இருந்து வரும் ஏலியன்கள் பூமிக்கு அப்பால் அறிவார்ந்த வாழ்க்கை மீதான ஆர்வத்தை தூண்டும். 

2026-ல் உலகம் தலைகீழாகுமா? அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா கணிப்பு | Baba Vanga Dangerous 2026 Predictions