ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களில் சுக்கிரன் செல்வம், அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் அதிபதியாக இருப்பதால் சுக்கிரன் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.

ஒருவருடைய ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றால் அவர்களின் வாழ்வில் பணத்துக்கும் செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது என்று நம்பப்படுகின்றது. 

த்வி துவாதச யோகம்: இந்த ராசியினருக்கு ஜாக்பாட் உறுதி! உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Shukran Creates Dwi Dwadash Rajyog 4 Lucky Zodiacs

அப்படி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிர பகவான் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். 

அந்தவகையில் இன்று (10.11.2025)காலை 9:46 மணிக்கு செவ்வாய் பகவானுடன் 30 டிகிரி இடைவெளியில் சந்திக்கிறார். இந்த சிறப்பு சேர்க்கை த்வி துவாதச யோகத்தை உருவாக்குகிறது.

குறித்த இணைப்பானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த த்வி துவாதச ராஜயோகம் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது. அவை எந்தெந்த ராசியினர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

த்வி துவாதச யோகம்: இந்த ராசியினருக்கு ஜாக்பாட் உறுதி! உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Shukran Creates Dwi Dwadash Rajyog 4 Lucky Zodiacs

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குறித்த  த்வி துவாதச யோகமானது வாழ்வில் பல்வேறு வகையிலும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது. 

மேஷ ராசியின் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவானும், ஏழாவது வீட்டில் சுக்கிர பகவானும் அமர்வதால் இந்த ராசியினர் பொருளாதார ரீதியில் அசுர வளர்ச்சியை காணப்போகின்றார்கள். 

நீண்ட காலம் இருந்து வந்த சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் இணக்கமான சூழல் உருவாகும். 

ரிஷபம்

த்வி துவாதச யோகம்: இந்த ராசியினருக்கு ஜாக்பாட் உறுதி! உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Shukran Creates Dwi Dwadash Rajyog 4 Lucky Zodiacs

சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்து உருவாக்கும் த்வி துவாதச யோகமானது ரிஷப ராசியினருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். 

திருமண உறவுகள், தொழில் கூட்டமைப்புகளில் சுமுகமான சூழல் உருவாகும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். 

திருமண வாழ்க்கையிலும் சரி தொழில் வாழ்க்கையிலும் சரி நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு மகிழ்ச்சிகரமாக முடிவு கிட்டும். வருமானம் பெறக்கூடிய பல வழிகள் உருவாக வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

த்வி துவாதச யோகம்: இந்த ராசியினருக்கு ஜாக்பாட் உறுதி! உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Shukran Creates Dwi Dwadash Rajyog 4 Lucky Zodiacs

விருச்சிக ராசியின் 12-வது வீட்டில் சுக்கிரனும், செவ்வாயும் இணைந்து த்வி துவாதச ராஜயோகத்தை உருவாக்குவதால், ஆன்மீக ஆற்றலையும் அதிர்ஷ்ட பலன்களையும் கொடுக்கும்.

வெளிநாட்டு பயணம் அல்லது வெளிநாட்டு மூலங்களில் இருந்து எதிர்ப்பாராத பணவரவு பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.

புதிய தொழில் முயற்ச்சிகள் லாபகரமான விளைவுகளை கொடுக்கும். பொருளாதார நிலையில் உச்சம் அடையும் வாய்ப்புகள் கூடிவரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.