பொதுவாகவே தங்கம், வெள்ளி நகைகளை வாங்கும் போது அதனை பிங்க் நிற காகிதத்தில் வைத்து கொடுக்கும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

எதற்காக இளஞ்சிவப்பு நிற காகிதத்தை மட்டுமே அனைத்து நகைக் கடைக்காரர்களும் பின்பற்றுகின்றார்கள் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! | Why Gold And Silver Wrapped In Pink Paper

இது காரணமின்றி வெறுமனே பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறையா அல்லது அதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

நகைக்கடைக்காரர்கள் எப்போதும் நகைகளை கீறல்களிலிருந்து பாதுகாக்கவும், அதன் பெறுதியை பறைசாற்றவும் காகிதத் தாள்களைப் பயன்படுத்துகிறார்கள்.

அறிவியல் ரீதியாக, ஒரு தாளின் இருண்ட பின்னணிகள் அதிக ஒளியை உறிஞ்சி, ஒளியிலிருந்து பிரதிபலிக்கும் வகையில் பிரகாசிக்கும் நகைகளுக்கு கவர்ச்சிகரமான மாறுபட்ட பின்னணியை உருவாக்கும்.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! | Why Gold And Silver Wrapped In Pink Paper

தங்கம், வெள்ளி, வைரம் அல்லது பிளாட்டினம் ஆகியவற்றால் செய்யப்பட்ட நகைகள் ஏற்கனவே பிரகாசிக்கின்றன அல்லது மின்னுகின்றன.இந்த பளபளப்பை இரட்டிப்பாக காட்டும் ஆற்றல் இளஞ்சிவப்பு நிற காகிதத்துக்கு அதிகம்.

நகையை சுற்றும் தாள் வெண்மையாக இருந்தால், வெள்ளை அனைத்து வண்ணங்களையும் பிரதிபலிக்கிறது என்பது நமக்குத் தெரியும், இதனால் நகைகளின் பளபளப்பு குறையும்.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! | Why Gold And Silver Wrapped In Pink Paper

அப்படியானால் கருப்பு நிறத்தை பயன்படுத்தினால்,  கருப்பு நிறம் பெரும்பாலான ஒளியை உறிஞ்சி, எதையும் பிரதிபலிக்காது. மேலும் அது துக்கம் மற்றும் எதிர்மறையுடன் தொடர்புடைய நிறம். கருப்பு நிற காகிதத்தில் சுற்றப்பட்ட நகைகளை மக்கள் வாங்க விரும்ப மாட்டார்கள்.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! | Why Gold And Silver Wrapped In Pink Paper

இளஞ்சிவப்பு நிறம் வெள்ளியின் பளபளப்பை அதிகரிக்கிறது. இந்த வண்ணக் காகிதத்தில் வெள்ளி அல்லது தங்கத்தைச் சுற்றி வைக்கும்போது, ​​நகைகள் இன்னும் பிரகாசமாக காட்சியளிக்கும் என்ற காரணத்துக்காவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.