பொதுவாகவே பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கின்றோமா என்பதை பார்ப்பது குறைவு.
ஆனால் மற்றவர்கள் தங்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதில் மட்டும் எப்போதும், தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பார்கள். இந்தநிலையில் நேர்மையானவர்களை பார்ப்பது அரிது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள், பிறப்பிலேயே உண்டைக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்ளாம்.
அப்படி வாழ்க்கை முழுதும் நேர்மையின் சின்னங்களாக வாழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் மர்மமான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவுகளில் சிறந்தவர்கள் என குறிப்பிட முடியாது.
ஆனால் அவர்கள் இறக்கும் நாள் வரை மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். குறிப்பாக வாழ்க்கை துணையுடன் சண்டை பிடித்தாலும் நிச்சயம் துரோகம் செய்யவே மாட்டார்கள்.
இவர்கள் நேசித்தாலும் சரி, வெறுத்தாலும் சரி, அடிப்படையில் அவர்கள் அந்த நிலைப்பாட்டிற்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசி பெண்கள் அவர்கள் உடன் இருக்க விரும்பும் நபர்களைக் கண்டுபிடித்த பின்னர், வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் மோதலைத் தவிர்ப்பதற்காக அவர்கள் கிசுகிசுக்கலாம் அல்லது முதுகுக்குப் பின்னால் பேசலாம், ஆனால் நிச்சயம் மற்றவகளுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.
இவர்கள் குறிப்பாக வாழ்க்கை துணைக்கு மிகவும் உண்மையானவர்களாக இருப்பதுடன், தொழில் விடயங்களில் நேர்மை தவறாதவர்களாக இருக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்களுக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் இவர்கள் விரும்பும் மக்களுக்கு ஏதாவது கெட்டது நடந்தால் அவர்கள் பெரும்பாலும் உடைந்துவிடும் மென்மையான உள்ளம் கொண்டவர்களாக இருப்பாதர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் நியாயத்தின் பக்கம் நிற்பார்கள், இவர்கள் வாழ்வில் எந்த உறவிலும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.