பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் படிப்பு என்பது மிக முக்கியமானது.

தனக்குள் இருக்கும் அறிவு, திறமை, ஆற்றல் ஆகிய அனைத்தையும் படிப்பு வெளியில் கொண்டு வருகிறது. சில நாடுகளில் வசதிகள் இல்லாமல் குழந்தைகள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக படித்த ஒரு நபர் வாழ்க்கையின் உண்மைத்தன்மையை புரிந்து, அதன்படி தன்னுடைய வாழ்க்கையை நடத்திச் செல்வார். நேர்றையான சக்திகளும் இது போன்ற நபர்களுக்கு துணையாக இருக்கும்.

இவ்வளவு பலன்களை தரும் கல்வியை நம்மில் சிலருக்கு மாத்திரமே சிறப்பாக கற்றுக் கொள்ள முடியும். ஏனெனின் அவர்களின் ஆர்வம், உழைப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுதே படிப்பில் கெட்டிகாரர்களாக இருப்பார்களாம். இவர்களின் விடாமுயற்சி வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன.

இந்த மாதம் பிறந்தவங்க படிப்பில் கெட்டிக்காரர்களாம்.. இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க

அந்த வகையில், பிறக்கும் பொழுதே கெட்டிக்காரர்களாக இருப்பவர்கள் பிறந்த மாதங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.          

செப்டம்பர்  செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் எந்தவொரு விடயத்திலும் நுணுக்கமாக இருப்பார்கள். புதிய விடயங்களை தேடி தேடி கற்றுக் கொள்வார்கள். ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு அதிலிருந்து சிறந்தவர்களாக விளங்குவார்கள். கற்றல் அனுபவத்தை மையமாகக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவார்கள். ஏராளமான விடயங்களை கற்றுக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வார்கள்
ஜனவரி ஜனவரி மாதம் பிறந்தவர்கள் மனஉறுதி, ஒழுக்கம் மற்றும் லட்சியவாதிகளாக இருப்பார்கள். வலுவான பணிகள் நெறிமுறைகளை கொண்டிருப்பார்கள். படிப்பில் விடாமுயற்சியுடன் இருப்பார்கள். இதுவே அவர்களின் வாழ்க்கையின் இலக்குகளை அடைய முக்கிய புள்ளியாக உள்ளது. எப்போதும் எதற்கும் தைரியமாக இருப்பார்கள்.  
ஜூன் ஜூன் மாதம் பிறந்தவர்கள் அறிவுசார் விஷயங்களில் கவனம் கொள்வார்கள். இயற்கையான ஆர்வம் கொண்டவர்களாகவம் இருப்பார்க்ள. பல விடயங்களை தேடி தேடி கற்றுக் கொள்வார்கள். விரைவாக ஒரு விடயத்தை புரிந்து கொள்வார்கள். சிறந்த தகவல் தொடர்புத் திறன்களை வளர்த்து கொண்டு தான் கூற வரும் விடயத்தை தெளிவாக மற்றவர்களிடம் கூறுவார்கள். படிப்பில் மிகப் பெரிய வெற்றியாளர்களாக வருவார்கள்.