எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதம்படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பின்னர் வளர ஆரம்பித்து விடுவார்கள். யார் சவால் விட்டாலும் அவர்களை எதிர் நிற்கும் தைரியம் இவர்களுக்கு இருக்கும். அப்படியானவர்கள் பிறந்த தேதி என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

தனிப்பட்ட வளர்ச்சி காணும் எண்கள்

இந்த தேதியில் பிறந்தவங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.. சவால் விடாதீங்க! | These Dates Born People Are Dangerous Numerology

3ஆம் தேதி எண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் 3ஆம் தேதியில் பிறந்தவர்கள் இனி வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். பேசுவதில் ரொம்பவே திறமையானவர்களாக இருக்கும் இவர்களிடம் விரைவாக எதையும் பேசி புரிய வைக்கலாம். தெரியாத நபர்களிடம் எந்தவித தயக்கம் மற்றும் பயம் இல்லாமல் பேசுவார்கள். கடின உழைப்பாளியாக இருக்கும் இவர்களிடம் வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். ஒரு வழியில் யாராவது அவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்களின் பேசும் விதம் பிறரை ஈர்க்கும்.
  6ஆம் தேதி எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6ம் தேதியில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள். நேர்மையானவர்களாக இருக்கும் இவர்களிடம் மற்றவர்களுடன் சண்டை போட மாட்டார்கள். இந்த பண்பால் வெற்றி இவர்களை தேடி வரும். இவர்கள் பிறரிடம் மிக எளிதாக பழகுவதால் புதிய வாய்ப்புகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
11ஆம் தேதி எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 11 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களாக இருக்கும் இவர்களிடம் மிக சுலபமாக அறிவை வளர்த்து கொள்ளலாம். பல வாய்ப்புகள் வரும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.