இந்த உலகில் பிறந்த பெண்கள் அனைவரும் குறிப்பிட்ட பருவமடைந்த பின்னர் ஒரு நல்ல ஆணை கணவராக அடைய வேண்டும் என ஆசைக் கொள்வார்கள்.

அப்படி ஆசையாக காத்திருந்து திருமணம் செய்து கொள்ளும் பொழுது சிலருக்கு மாத்திரமே இந்த திருமண வாழ்க்கை சிறப்பாக அமைகிறது.

அந்த வகையில், வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகளை உருவாக்கி பிரபலமானவர் தான் சாணக்கியர் இவருடைய அறிவுரைகளை தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர். 

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கிய சாணக்கியர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

பெண்களை அலைய விடும் ஆண்களிடம் உள்ள 5 குணங்கள்.. உங்க கணவரிடம் இருக்கா? | Qualities Of Men Attracts Women In Chanakyan Tamil

அப்படியாயின், சாணக்கிய நீதியில் பெண்கள் எதிர்பார்க்கும் குணங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சில ஆண்களிடம் மட்டுமே காணப்படும். அவர் கூறிய நல்ல குணங்கள் உள்ள ஆண்ணொருவர், பெண்ணுக்கு கிடைத்து விட்டால் அவள் தான் இந்த உலகின் அதிர்ஷ்டசாலியாக இருப்பாள்.

அந்த வகையில், பெண்களை கவரும் குணங்கள் என்னென்ன? அது எந்த வகையில் பெண்களின் மனதில் இடம்பிடிக்கிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.       

 1. அமைதி

  • பெண்களுக்கு எப்போதும் அமைதியாக இருக்கும் ஆண்களை தான் அதிகமாக தேடிப்போய் பேசுவார்கள். ஏனெனின் அமைதியாக இருக்கும் ஆண்கள் ஒருவிதமான அழகு கொண்டவர்களாக இருப்பார்கள். பார்ப்பதற்கு மிக அமைதியாக இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்கள். இவர்களுடன் வாழ்க்கை நடத்துவதும் இலகு.

பெண்களை அலைய விடும் ஆண்களிடம் உள்ள 5 குணங்கள்.. உங்க கணவரிடம் இருக்கா? | Qualities Of Men Attracts Women In Chanakyan Tamil

2. சிறந்த தொடர்பாடல்

  • பொதுவாக பெண்களுக்கு தன்னுடன் துணை அமைதியாக இருந்து தன்னிடம் உள்ள பிரச்சினைகளை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கான தீர்வை அன்பாக கொடுக்கும் பொழுது அவர்களை மிகவும் பிடிக்கும். இப்படியான துணை கிடைத்தால் அந்த உறவு மரியாதையாகவும், அரவணைப்பாகவும் இருக்கும். சற்று குறைவாக மற்றும் சரியாக பேசும் ஆண்கள் பெண்களை எளிதில் கவர்வார்களாம். அப்படியான துணையை அடைய பெண்கள் விரும்புவார்கள்.

பெண்களை அலைய விடும் ஆண்களிடம் உள்ள 5 குணங்கள்.. உங்க கணவரிடம் இருக்கா? | Qualities Of Men Attracts Women In Chanakyan Tamil

3.  ஆளுமை

  • அழகான தோற்றம் கொண்ட ஆண்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு இருந்தாலும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் மீது சற்று அதிகமாகவே இருக்கும். பெண்கள் எப்போதும் பேராசை மற்றும் திமிர் பிடித்த ஆண்களிடம் இருந்து விலகி இருப்பது வழக்கம். ஏனெனின் அப்படியான ஆண்கள் பெண்களை அடிமையாக வைத்திருப்பார்கள். நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள ஆண்கள் குறைவாக இருப்பார்கள். அவர்கள் கிடைத்த பெண்கள் பாக்கியசாலிகளாக இருப்பார்கள்.

பெண்களை அலைய விடும் ஆண்களிடம் உள்ள 5 குணங்கள்.. உங்க கணவரிடம் இருக்கா? | Qualities Of Men Attracts Women In Chanakyan Tamil

4. உதவும் குணம்

  • மற்றவர்களுக்கு எப்போதும் உதவ வேண்டும் என நினைப்பவர்கள் குறைவு. அப்படி உதவும் ஆண்களை பார்த்தால் பெண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருக்கும். மனைவிக்கு வெளிப்புற வேலை தவிர வீட்டு வேலைகளிலும் உதவ வேண்டும் என நினைக்கும் துணை கிடைத்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்.

பெண்களை அலைய விடும் ஆண்களிடம் உள்ள 5 குணங்கள்.. உங்க கணவரிடம் இருக்கா? | Qualities Of Men Attracts Women In Chanakyan Tamil

5. நம்பிக்கை

  • பொதுவாக எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கை முக்கியம். தன்னுடைய துணை எங்கு இருந்தாலும் அவள் தனக்காக இருப்பாள் என நம்பிக்கை கொள்ளும் ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். தனிப்பட்ட விடயங்களை ரகசியம் காக்கும் ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்.   

பெண்களை அலைய விடும் ஆண்களிடம் உள்ள 5 குணங்கள்.. உங்க கணவரிடம் இருக்கா? | Qualities Of Men Attracts Women In Chanakyan Tamil