பொதுவாகவே திருமண வாழ்க்கை மீது ஆண்களுக்கம் சரி, பெண்களுக்கும் சரி ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருப்பது இயல்பு தான். குறிப்பாக ஆண்கள் தங்களுக்கு வாழ்க்கை துணையாக கிடைக்கும் பெண் பற்றி பெருமளவில் எதிர்பார்ப்பை கொண்டிருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் கணவனின் அத்தனை விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஒரு தலைசிறந்த மனைவியாக இருப்பார்களாம்.
அப்படி கணவனின் விருப்பங்களுக்கான தன்னையே தியாகம் செய்யும் குணத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங்
ரிஷபம்
ரிஷபம் ராசியில் பிறந்த பெண்கள் நம்பகமான அன்பைத் தேடும் குணம் கொண்டவர்களாகவும், உண்மையாக அன்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் இந்த நட்சத்திர ராசி இயற்கையாகவே உறவு சார்ந்தது. நிலையான உறுப்பு மற்றும் நடைமுறை பூமி ராசியாக இருப்பதால், அவர்கள் நிலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை விரும்புகிறார்கள்.
ரிஷபம் மாற்றத்தைத் தவிர்க்கிறது. எனவே, அவர்கள் காதலில் விழும்போது உண்மையுள்ளவர்களாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
கடகம்
கடக ராசியைப் பொறுத்தவரையில், பிறப்பிலேயே உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு மனைவியாக தங்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பார்கள். கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த எல்வைக்கும் செல்லும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கூட்டாண்மையுடன் தொடர்புடையவர்கள், காதல் கிரகத்தால் ஆளப்படுவதால், அவர்களின் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் இருக்கும்.
நீண்ட கால உறவுகளில் கூட, காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் இந்த ராசி பெண்கள் ஒரு மனைவியான சிறந்து விளங்குகின்றார்கள். இவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் உறவின் மகத்துவத்தை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.