2015-ல் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான பின்தான் தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தமிழில் நடித்த ‘கரு, மாரி 2, என்ஜிகே’ ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை. அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளன. ‘பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஜோடியாக ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி. சாய் பல்லவி, சமந்தா இன்னும் சில நாள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்குள் படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா. இயக்குனரும் எடுத்தவரையில் எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த நடிகை சமந்தா, ‘இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய் பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் - சமந்தா
- Master Admin
- 04 May 2020
- (618)

தொடர்புடைய செய்திகள்
- 06 March 2021
- (560)
வேதிகாவிற்கு திருமணமா?.. அவரே சொன்ன பதில...
- 18 March 2021
- (506)
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதமாவதற்கு க...
- 26 January 2021
- (563)
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.