ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் செய்யக்கூடாத தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்களின் வீடுகளில் ஸ்மார்ட் டிவி காணப்படுகின்றது. சாதாரண டிவியை விட மெல்லியதாகவும், இடத்தை அடைக்காமல் சுவற்றில் கூட மாட்டிக ்கொள்ள முடிகின்றது.
சாதாரண டிவியை விட தரத்தில் சிறந்ததாக காணப்படும் ஸ்மார்ட் டிவியை நீங்கள் சரியான முறையில் கையாளவும், சுத்தம் செய்யும் போது கவனமாகவும் செயல்பட வேண்டும்.
ஆம் நீங்கள் சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், ஸ்மார்ட் டிவி பழுதாகி விடுமாம். அவ்வாறு ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விடயத்தினை தெரிந்து கொள்வோம்.
ரசாயனங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இந்த பொருட்கள் திரையை சேதப்படுத்தும்.
கடினமாக ப்ரஷ்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனை பயன்படுத்தினால் திரையில் கீறல் ஏற்பட்டு பிரகாசம் குறையுமாம்.
தண்ணீரை தெளித்து சுத்தம் செய்யக்கூடாது, அவ்வாறு பயன்படுத்தினால் திரையில் தண்ணீர் ஊடுருவி டிவியை சேதப்படுத்திவிடுமாம்.
இதே போன்று கடினமான துணிகளை பயன்படுத்தி துடைக்கக்கூடாது. இவையும் திரையில் கீறலை ஏற்படுத்திவிடும்.
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் மிண் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். சுவிட்ச் போர்டில் மாட்டியிருக்கும் ப்ளக்கை நீக்குவது பாதுகாப்பானதாகும். ஏனெனில் மின்சாரம் ஷாட் சர்க்யூட், ஷாக் அடிக்காமல் ஆபத்தை தவிர்க்க முடியும்.
மைக்ரோஃபைப்பர் துணியை லேசாக ஈரப்பதத்துடன் வைத்து மென்மையாக துடைக்கவும். முழு பலத்தை வைத்து அழுத்தி தேய்க்கக்கூடாது.
டிவியின் பக்கங்களிலும் போர்ட்களிலும் தேங்கியிருக்கும் தூசியை அகற்றுவதற்கு ஏர் ப்ளோயரைப் பயன்படுத்தலாம்.
டிவியின் திரையில் உள்ள கரைகளை அகற்ற நீங்கள் சானிடைசர் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் கூட பயன்படுத்தலாம்.