“உணவே மருந்து” என்ற பன்மொழிக்கேற்ப உணவை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை குணமாக்கலாம். ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவது அவசியம்.

ஒவ்வொரு காய்கறிகள், மூலிகை, இலை, தாவரம் மற்றும் தானியங்களில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன. வீட்டில் சமைக்க காய்கறிகள் இல்லாவிட்டால் என்ன செய்வது என புலம்பாமல் காரசாரமாக ரசம் செய்து சாப்பிடலாம்.

இது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும். சிலருக்கு பருவ காலங்கள் மாறும் பொழுது சளி தொல்லை அதிகமாக இருக்கும்.

அவர்கள் சரியாக மூச்சு விட முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இந்த பிரச்சினையுள்ளவர்களுக்கு மிளகு தட்டிப்போட்டு ரசம் செய்து கொடுக்கலாம்.

தொண்டையில் கட்டியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்றும் மிளகு ரசம்- இத மட்டும் சேர்த்துக்கோங்க | Milagu Rasam Recipe In Tamil

இது தொண்டை மற்றும் மூச்சுக்குழாயில் அடைந்து கிடக்கும் சளியை அகற்றி நிம்மதியான சுவாசத்தை கொடுக்கும்.

அந்த வகையில், அருமருந்து எனப்படும் மிளகு ரசம் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.       

தேவையான பொருட்கள்

  • ஒரு பெரிய சைஸ் புளி
  • தண்ணீர் -3 கப்
  • மிளகு-  3 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பூண்டு-  5 முதல் 7 பல்
  • எண்ணெய் -2 டீஸ்பூன்
  • கடுகு-   அரை டீஸ்பூன்
  • வற மிளகாய்-   3
  • பெருங்காயம் தூள் -  2 டீஸ்பூன்
  • தக்காளி-   2
  • கறிவேப்பிலை- ஒரு கொத்து
  • மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
  • உப்பு-  தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி    

முதலில் ஒரு பாத்திரத்தில் சுடு நீர் கொஞ்சமாக ஊற்றி புளியை ஊற வைக்கவும். சரியாக 30 நிமிடம் வரை ஊற வைத்து, அதனை நன்றாக கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

தொண்டையில் கட்டியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்றும் மிளகு ரசம்- இத மட்டும் சேர்த்துக்கோங்க | Milagu Rasam Recipe In Tamil

அதன் பின்னர், அம்மியில் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பக்கமாக வைத்து விட்டு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு போட்டு தாளித்து, அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர், நறுக்கிய தக்காளிகள், கறிவேப்பிலை போட்டு கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்க்கவும்.

தொண்டையில் கட்டியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்றும் மிளகு ரசம்- இத மட்டும் சேர்த்துக்கோங்க | Milagu Rasam Recipe In Tamil

தக்காளி நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு கலவையை சேர்த்து, புளி சாறு ஊற்றி கிளறவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான மிளகு ரசம் தயார்!

இது கரகரப்பான தொண்டைக்கு இதமான உணர்வை கொடுக்கக் கூடியதாகும். சளி பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்கள் செய்து சாப்பிடலாம். உடனடி நிவாரணம் கிடைக்கும்.