தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.

அறிமுக இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் படப்பிடிப்பை தொடங்கி பஞ்சாப், கத்தார், ஓமன் ஆகிய இடங்களில் நடத்த உள்ளனர்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ்

 

இதனிடையே இப்படத்தில் சாந்தி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், அதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாந்தி செளந்தரராஜன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கவில்லை என அவரின் பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார்.