ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் அனைவரின் கவனமும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மேல் தான் இருக்கும்.

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு மருத்துவர் மற்றும் புகழ்பெற்ற ஜோதிடர் தான் நோஸ்ட்ராடாமஸ்.

இவர், இதுவரையில் வரலாற்றில் நடந்த முக்கியமான இயற்கை பேரழிவுகள், புரட்சிகள், போர்கள் மற்றும் தாக்குதல்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகளை அவர் தனது படைப்புகளில் ஏற்கனவே கணித்து குறிப்பிட்டுள்ளார். அவரது படைப்புகளில் இருக்கும் குறியீட்டு மொழிகளில் எதிர்கால கணிப்புகளை காணலாம்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு 2025- ஆம் ஆண்டின் ஜோதிட கணிப்புகள் மற்றும் குறிப்பிட்ட ராசிகளின் பண்புகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.

நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, “2025 ஆம் ஆண்டு சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் கோடீஸ்வரராகும் வாய்ப்புகளை பெறவுள்ள ராசிகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

2025-ல் செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள்- நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு கூறுவது என்ன? | Nostradamus Predictions 2025 Lucky Zodiac

மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, 2025-ல் சகல வளங்களையும் பெற்று வசதியாக வாழ்வார்கள். இலக்கை அடையும் காலம் வந்துவிட்டது, பணம் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது. செவ்வாய் பெயர்ச்சி அதிகமாக இருக்கும் ஆண்டாக இருக்கும் 2025-ல் சாதகமான பலன்கள் அதிகமாக இருக்கலாம். 
ரிஷபம் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே நேர்த்தி, ஸ்திரத்தன்மைகொண்டவர்களாக இருப்பார்கள், 2025 ஆம் ஆண்டில் நடக்கும் கிரக நிலைகளும் இந்த ராசியினருக்கு சாதகமாகவே இருக்கும். இது புத்திசாலித்தனமான முதலீடுகளுக்கு சிறந்த ஆண்டாக பார்க்கப்படுகின்றது. நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, நீண்ட கால நிதி இலக்குகளை கொண்டவர்கள் இந்த ஆண்டில் முன்னேற வாய்ப்பு உள்ளது.
சிம்மம்  சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கவர்ச்சி மற்றும் தலைமைத்துவ திறன்களை கொண்டவர்களாக இருப்பார்கள். 2025-ல் இவர்களின் திறன்கள் அதிகமாக இருக்கும். எப்பேர்பட்ட சூழ்நிலைக்கும் தயங்கியவர்களாக இருப்பார்கள். வணிக முயற்சிகள் 2025 ஆம் ஆண்டின் கிரக நிலைகளால் சாதகமாக அமையும். பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் ஆதரவால் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பல மைல்கற்களை எட்ட முடியும் மற்றும் அவர்களின் ஆக்கபூர்வமான யோசனைகளால் இலட்சிய பாதையில் பயணிப்பார்கள்.