பூசணி விதைகளை நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் நம் உடலுக்கு நன்மையை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது.
பொதுவாகவே நம்மில் பலரும் பூசணிக்காயை உணவில் பயன்படுத்துவதை விடவும் கண் திருஷ்டிக்காக வீதியில் உடைப்பதற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
அப்படி தெருவில் எறியப்படும் பூசணி விதைகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூசணி விதையில் இயற்கையாகவே ட்ரைப்டோபான் என்ற அமினோ ஆசிட் உள்ளது. மெலடோனின் மற்றும் செராடோனின் சேர்க்கைக்கும் இது மிகவும் அவசியமாகும்.நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
பூசணி விதையில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு செல்கள் முறையாக செயல்படுவதற்கு உடலில் போதுமான அளவு துத்தநாகம் அவசியமாகும்.
பூசணி விதையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனையும் இதயத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ் உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றது. பெண்களின் கருவை பலமடையடைய செய்வதுடன் கருச்சிதைவு மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகளுக்காண இயற்கை முறை தீர்வாக இருக்கின்றது.
மற்றும் ஆரோக்கியமான வழியில் எடை குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க பூசணி விதைகளை தினமும் சிற்றுண்டியாக சாப்பிடுங்கள்.
அவை புரதம், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் வளமான மூலமாகும், அவை புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் ஆபத்து காரணிகளைக் குறைக்கின்றன.
பூசணி விதைகளின் அழற்சி எதிர்ப்பு திறன்கள் கல்லீரல், சிறுநீர்ப்பை, குடல் மற்றும் மூட்டுகளில் நல்ல செயல்பாட்டை பராமரிக்க உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
மெக்னீசியம் உள்ளடக்கம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
பூசணி விதைகள் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.
அவை அப்போப்டொசிஸ் அல்லது புற்றுநோய் உயிரணு இறப்பையும் தூண்டுகின்றன. பூசணி விதைகளில் உள்ள அதிக மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீராக்க உதவுகிறது.
இந்த விளைவுக்கு நன்றி, மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயங்களை குறைக்க உதவுகின்றது.
பூசணி விதைகளை நொறுக்கு தீனியாகவோ, சாலடில் சேர்த்தோ அல்லது ஓட்ஸ், தயிர் போன்றவற்றின் மேலே தூவியும் உண்ணலாம்.