காதல் உறவில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதை அவர்களின் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரியாதையாக நம்முடைய துணை நம்மை நடத்தும் பொழுது தன்னை அறியாமல் ஒரு நம்பிக்கை வரும்.
அதுவே நிம்மதியான வாழ்க்கையை ஆயுள் முழுவதும் தரும். மரியாதை இல்லாவிட்டால் அந்த வாழ்க்கையை பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது என சாணக்கியர் கூறியிருக்கிறார்.
அதே போன்று தன்னுடைய துணையை தொடர்ந்து அவமதிப்பவர்கள் மற்றும் புண்படுத்துபவர்கள் விரைவில் அந்த உறவை இழந்து விடுவார்கள். சிலர் இதை தெரியாமல் செய்வார்கள், சிலர் இதை வேண்டுமென்று செய்வார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணையை அவமதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் சேர்ந்து வாழ்வது மிகவும் கடினமான ஒன்று.
அந்த வகையில், தன்னுடைய துணையை எப்போதும் அவமானப்படுத்தும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
அஸ்வினி | அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பார்கள். அவர்கள் வெளியில் பார்ப்பதற்கு சாகசக்காரர்களாக இருந்தாலும் விரைவாக கோபம் கொள்வார்கள். அவர்கள் துணை மட்டுமல்லாது மற்றவர்களையும் மதிக்கமாட்டார்கள். அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என உறவுகள் மீதும் தங்களின் ஆதிக்கத்தை காட்டுவார்கள். இதனால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையிலேயே தான் இருப்பார்கள். துணையை அவமதிப்பதால் அவர்கள்விட்டுச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. |
ரோகிணி | ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பிடிவாதமாக இருப்பார்கள். இவர்களிடம் அளவுக்கு அதிகமான விசுவாசம் இருந்தாலும் பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாக இரப்பார்கள். துணையின் ஆசை, விருப்பம் இரண்டையும் கணக்கில் கூட எடுக்கமாட்டார்கள். துணையை சுதந்திரமாக ஒரு வேளையையும் செய்ய விடமாட்டார்கள். |
மிருகசீரிஷம் | மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேடிக்கையானவர்களாகவும், பேசுவதில் கில்லாடியாகவும் இருப்பார்கள். இரட்டை இயல்பு இருப்பதால் எப்போதும் அவர்களின் கருத்துக்கள் ஒன்றை ஒன்று முரண்பட்டதாகவே இருக்கும். வாக்குறுதியை மறந்து விட்டு வேறு ஏதாவது வேலைச் செய்து கொண்டிருப்பாரக்ள். உணர்ச்சிரீதியாகப் பிரிந்து இருப்பதன் மூலம் அவர்கள் தங்கள் துணையை அவமதிக்கக்கூடும். துணையின் தேவைகளை புரிந்துக் கொள்ளாது. அவர்களை மட்டும் முக்கியம் என நினைப்பார்கள். |