இன்றைய தினம் செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளதால் எந்த மூன்று ராசியினர் நேர்மறையான பலனை பெறுகிறர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் முக்கியமான கிரகமாக சனி, செவ்வாய், சூரியன் இருக்கின்றது. இதில் செவ்வாய் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுகின்றது. 

வலிமை துணிச்சல் ஆகியவற்றிற்கு காரணியாக இருக்கும் செவ்வாயின் ஒவ்வொரு அசைவும் ஜோதிடத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இதனால் சில ராசியினரின் வாழ்க்கையில் தாக்கத்தையும், சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகிய பஞ்சகிரக ராஜயோகம்! இந்த 3 ராசிக்கு பேரதிர்ஷ்டம் | Mars Transit To Aquarius 3 Zodiac Signs Luck Money

செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் பயணிப்பார். தற்போது மகர ராசியிலிருந்து, இன்று தனது ராசியினை மாற்றி கும்ப ராசிக்கு நுழைந்துள்ளார்.

இந்த பெயர்ச்சியால் ஏப்ரல் 2ம் தேதி வரை கும்ப ராசியில் இருப்பார். இத்தருணத்தில் சில குறிப்பிட்ட ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படுகின்றது.

ஏற்கனவே கும்ப ராசியில் சுக்கிரன், புதன், சூரியன், ராகு இருப்பதால் தற்போது செவ்வாயும் சேர்ந்து பஞ்சகிரக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது.

செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகிய பஞ்சகிரக ராஜயோகம்! இந்த 3 ராசிக்கு பேரதிர்ஷ்டம் | Mars Transit To Aquarius 3 Zodiac Signs Luck Money

மேஷம்

மேஷ ராசியில் 11வது வீட்டில் செவ்வாய் கிரகம் நுழையும் நிலையில், நிதி ரீதியாக பிரச்சனைகள், நிதி சிக்கல் இவற்றிலிருந்து மீண்டு வரலாம். வருமானத்திற்கு வழி பிறப்பதுடன், ஏற்கனவே செய்திருந்த தொழிலும் நல்ல லாபம் கிடைக்கின்றது.

நிலுவையில் உள்ள உங்களது பணம் கட்டாயம் வந்து சேரும், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதுடன், ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியையும் பெறுவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகிய பஞ்சகிரக ராஜயோகம்! இந்த 3 ராசிக்கு பேரதிர்ஷ்டம் | Mars Transit To Aquarius 3 Zodiac Signs Luck Money

மிதுனம்

மிதுன ராசியில் வெப்பாய் 9வது வீட்டில் நுழையும் நிலையில், முழு ஆதரவும் கிடைக்கின்றது. வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு, நிதி ரீதியான ஆதாயங்களையும் பெற முடியும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படுவதுடன், தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரித்து அதிர்ஷ்டத்துடன் இருப்பார்கள்.

செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகிய பஞ்சகிரக ராஜயோகம்! இந்த 3 ராசிக்கு பேரதிர்ஷ்டம் | Mars Transit To Aquarius 3 Zodiac Signs Luck Money

சிம்மம்

சிம்ம ராசியில் செவ்வாய் 7வது வீட்டில் நுழைய உள்ள நிலையில், இதனால் நேர்மறையான பலன்கள் கிடைப்பதுடன், தொழில், வியாபாரம் இவற்றில் நல்ல லாபத்தையும் பெற முடியும்.

புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன், எந்த வேலையை கையில் எடுத்தாலும் வெற்றியும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம், திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் நல்ல வரண் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகிய பஞ்சகிரக ராஜயோகம்! இந்த 3 ராசிக்கு பேரதிர்ஷ்டம் | Mars Transit To Aquarius 3 Zodiac Signs Luck Money