ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்தவுடன் இந்த கிரக பெயர்ச்சிகளும் நடைபெறும் அது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு வகைப்படும்.

மார்ச் 02, 2025 அன்று, சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் நுழைகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குத் திரும்புவது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கப் போகிறது.

எனவே இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு நன்மை மட்டும் கிடைக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

27 ஆண்டுகளின் பின் உருவாகும் சனி நட்சத்திரபெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Saturn Transit In Poorattathi Nakshatra

கடகம்
  • கடக ராசிக்காரர்கள் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வது அவர்களுக்கு சிறப்பான பலன்ன்களுக்கு வழிவகுக்கும்.
  • இந்த பெயர்ச்சியின் பின்னர் உங்கள் தன்னம்பிக்கையால் உயர்வீர்கள்.
  • உங்கள் அதிகார பலத்தின் மூலம் பல விடயங்களை செய்து முடிக்கலாம்.
  • வேலை வாழ்க்கையில், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • உங்களது தொழில் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறி செல்வீர்கள்.
கன்னி
  • கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் நல்ல பலன்களைத் தரும்.
  • உங்களது வாழ்க்கையில் புதிய மாற்றங்களை பெறுவீர்கள்.
  • உங்களது தொழில் வாழ்க்கையில் நல்ல உயர்வு கிடைக்கும்.
  • வேலை வாழ்க்கையைப் பொறுத்தவரை, பதவி உயர்வுகள் மற்றும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • நிதி நலமையில் நல்ல முன்னேற்றம் வரும்.
மீனம்
  • மீன ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவது நல்ல பலன்களை அளிக்கும்.
  • அவர்கள் பணியிடத்தில் செய்யும் முயற்சிகளுக்குப் பாராட்டப்படுவார்கள்.
  • நேர்மையான உங்கள் முயற்றிசியால் சனிபகவான் நற்பலனை அள்ளி தருவார்.
  • அரசியல் மற்றும் அரசுத் துறையுடன் தொடர்புடைய நபர்கள் அதிக லாபம் ஈட்டலாம்.
  • பணத்தின் உதவி நீங்கள் செய்துள்ளதால் உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும்.