உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்ய தொடர்ந்து 24 நாட்கள் இந்த ஒரு பானத்தை பருகி பின் வித்தியாசத்தை பாருங்கள்.
30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நோய்களை சரிசெய்ய நமது உணவின் மூலமும் முடியும். ஆப்பிள் ஒன்றை எடுத்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவேண்டும் பின்னர் ஒரு பீட்ரூட்டை எடுத்து நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு எலுமிச்சை பழம் எடுத்துக்கொள்ளவும்.
நறுக்கிய ஆப்பிள், தோல் நீக்கி சுத்தம் செய்த பீட்ரூட், எலுமிச்சை சாறு இவற்றுடன் அரை லிட்டல் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும். இதை 24 நாட்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவரவேண்டும்.
இப்படி செய்தால் கல்லீரல் மற்றும் உடல் முற்றிலும் சுத்தமாகும். உடலில் தங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது கல்லீரல் செல்களை பாதுகாக்கும், உடல் முழுவதிலும் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.
ஆப்பிளின் செரிமானத் தன்மை மற்றும் எலுமிச்சையின் கழிவுநீக்க குணத்துடன் சேரும்போது, இது உங்கள் உடலை ஆரோக்கியமாக இயற்கை முறையில் சுத்தம் செய்கிறது.