ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்களில் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தனிமையாக இருக்கும் போதும் கூட வாழ்க்கையை அனுபவித்து வாழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி தனிமையிலும் இனிமை காணும் விசேட குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால், இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை மீதும் உலகத்து இன்பங்களின் மீதும் தீராத மோகம் இருக்கும்.
இவர்கள் தங்களின் நேரத்துக்கும் தனிப்பட்ட சந்தோஷங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அவர்களின் எதிர்கால திட்டங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.
இவர்கள் முன்னாள் காதல் குறித்தும் காதல் தோல்விகள் பற்றியும் நினைத்து கவலைப்படும் குணம் அற்றவர்களாகவும் தனிமையையும் ரசிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தாங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், அவர்களுடன் முறன்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
இப்படி உறவுகளில் அடிகடி முறன்பட்டுக்கொள்வதால், இவர்கள் தனிமையில் மகிழ்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக உணர்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணங்களை அதிகம் கொண்டவரை்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க நினைப்பார்கள்.
இவர்களின் வசீகரமான தோற்றம் மற்றும் நல்ல குணங்களின் காரணமாக எந்நேரம் இவர்களை சுற்றி ஒரு நண்பர் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.
அதனால் இவர்கள் உறவுகளின் பிணைப்பு இல்லாம நிலையை உயர்வது கிடையாது. இதனால் இவர்களுக்கு தனிமை மிகவும் மகிழ்ச்சி நிறைந்த மன அமைதியை கொடுக்கின்றது. இவர்கள் தனிமையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.