ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதால் மே 19ம் தேதிக்கு பின்பு பேரதிர்ஷ்டத்தை அடையும் ராசியினை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாளை ரிஷப ராசியில் சுக்கிரன் நுழையும் நிலையில், ரிஷப ராசியின் அதிபரி சுக்கிரன் ஆவார். இத்தருணத்தில் சுக்கிரனுடன் சூரியனும் ரிஷப ராசியில் இருப்பதால் சுப யோகம் உண்டாகி சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கின்றது.
ரிஷபம்:
சுக்கிரனின் சஞ்சாரத்தால் ரிஷப ராசியின் ஆளுமை முன்பை விட அதிகமாக வளர்வதுடன், வேலையில் பெரிய வெற்றிகள் மற்றும் அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைப்பதுடன், உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஏற்படும். புதிய வாய்ப்பு, தொழில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைப்பதுடன், ஆடம்பர பொருட்களை வாங்கும் நிலையும் ஏற்படும்.
விருச்சிகம்:
சுக்கிரனின் சஞ்சாரத்தால் விருச்சிக ராசியினருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், வருமானமும் அதிகரிக்கும், நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பான லாபத்தை நிச்சயம் பெறுவீர்கள்.
கும்பம்:
சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசியினருக்கு மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம், ஆரோக்கியம் சிறப்பாகவும் இருக்கும். வருமானம் அதிகரிப்பதுடன், புதிய வருமானமும் கிடைக்கும்.