இந்திய சினிமாவில் முன்னணி பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளவும் செய்தார். ஆனாலும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து எஸ்பிபி சரண் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அப்பா எஸ் பி பி பி-க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், செலவுகள் குறித்து எம்ஜிஆர் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடும்.
எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு நானும் என் குடும்பமும் மிகவும் கடமைப்பட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளார். தயவு செய்து தவறான தகவல்களை பரப்பி எங்களை காயப்படுத்தாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இவர் எஸ்பிபியின் உடலை அடக்கம் செய்த தாமரைபாக்கத்தில் அவருக்கு நினைவு இல்லம் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.