பொதுவாக பல நூற்றாண்டுகளாக மக்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஜோதிடம் உதவியாக உள்ளது.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு அடையாளத்துக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

இதன்படி, நமது உடலில் உள்ள மச்சங்களுக்கு ஒரு அர்த்தம் உளள்து. மச்சங்கள் ஆண் மற்றும் பெண் உடலில் இருக்குமிடத்தைப் பொறுத்து அதற்கான அர்த்தங்கள் மாறுப்படும்.

ஆண்களில் சில இடங்களில் இருக்கும் மச்சங்கள் அவர்களுக்கு வரும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.

அந்த வகையில், ஆண்களின் உடலில் இருக்கும் மச்சங்களுக்கான அர்த்தங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

இந்த இடத்தில் மச்சம் உள்ள ஆண்கள் அரசாள பிறந்தவர்களாம்.. உங்களுக்கு இருக்கா? | Lucky Moles On Male Body That Bring Good Luck

வலது கன்னத்தில் மச்சம் ஒரு ஆணின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியை பெறுவார்கள்.
இடது கன்னத்தில் மச்சம் இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் உணர்ச்சிரீதியாக சமநிலையானவர்களாக இருப்பார்கள். அந்த இடத்தில் மச்சம் உள்ள ஆண்கள் அக்கறையுள்ளவராகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். அமைதியான மற்றும் பகுத்தறிவு மனநிலையுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். 
தாடையில் மச்சம் தாடையில் மச்சம் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் வலுவான மன நிலை இருக்கும். வெற்றிகரமானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பதால் சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். மேலும் மனஉறுதியுடன் இருக்கும் இவர்கள் கனவுகளுடன் இருப்பார்கள். அதற்காக வேலைச் செய்து வெற்றிப் பெறுவார்கள்.
உள்ளங்கையில் மச்சம் உள்ளங்கையில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டமாகும், அதிலும் குறிப்பாக வலது கையில் இருந்தால் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுவார்கள். உள்ளங்கையில் மச்சம் உள்ள ஆண்கள் நிதி வெற்றி அனுபவிப்பார்கள். வாழ்க்கையில் பெரிய சாதனை செய்யும் வாய்ப்பு உள்ளது.