பொதுவாக சிலருக்கு காலநிலை மாற்றத்தினால் சளி, இருமல் போன்ற நாள்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

வெல்லம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என பலரும் கூறி கேட்டிருப்போம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த பேரையும் ஆட்டி படைக்கும் தொண்டை வலி, சளி, இருமலில் இருந்து அவ்வளவு எளிதாக யாராலும் நிவாரணம் பெற முடியாது. இதனால் சுவாச கோளாறுகள், மூச்சு திணறல் ஆகிய பிரச்சினைகளும் ஏற்படலாம்.

அந்த வகையில், வெல்லம் மற்றும் கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கிராம்பு- வெல்லம் கசாயம்.. ஒரு தடவை குடிச்சு பாருங்க- பலன் நிச்சயம் | Health Benefit Of Clove Jaggeryஅப்படியாயின் இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

1. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு கிராம்பு, வெல்லம் சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். ஏனெனின் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக வாயு, அசிடிட்டி, அஜீரணம் இருக்கும். இதனை கிராம்பு கட்டுக்குள் கொண்டு வருகிறது.

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கிராம்பு- வெல்லம் கசாயம்.. ஒரு தடவை குடிச்சு பாருங்க- பலன் நிச்சயம் | Health Benefit Of Clove Jaggery

2. எடை குறைக்க நினைப்பவர்கள் கிராம்பு, வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். ஏனெனின் வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரியாகும் பொழுது உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக செல்லும். கிராம்பு மற்றும் வெல்லம் சாப்பிடும் பொழுது பசி இருக்காது.

3. நாள்ப்பட்ட சுவாசக் கோளாறு பிரச்சினைக்கு கிராம்பு மற்றும் வெல்லம் முற்றுப்புள்ளி வைக்கிறது. அத்துடன் சிலர் ஆஸ்துமா, நுரையீரல் தொற்று ஆகிய நோய்களால் அவஸ்தைப்படுவார்கள்.

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கிராம்பு- வெல்லம் கசாயம்.. ஒரு தடவை குடிச்சு பாருங்க- பலன் நிச்சயம் | Health Benefit Of Clove Jaggery

4. வெல்லம், கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.

5. குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ள கிராம்பு, வெல்லம் ஆகிய இரண்டும் உதவிச் செய்கிறது. இந்த கலவையை உட்க்கொள்ளும் ஒருவருக்கு உடல் சூடாகவே இருக்கும்.