ஃபுட் பாய்சன் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடம்பிற்கு தேவையான சத்துக்களைக் கொண்ட உணவினை தெரிவு செய்து சாப்பிட்டாலே ஃபுட் பாய்சன் பிரச்சனை எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகின்றது.
நமது உடல் தேவை மற்றும் செரிக்கும் தன்மையை பொறுத்து உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு நாளும் சராசரியான அளவில் தேவைப்படும் சத்துக்களுக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாம் சாப்பிடும் போது ஃபுட் பாய்சன் உட்பட எந்தவித நோயும் ஏற்படாதாம்.
ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் அவசர அவசரமாக சாப்பிடுவதும் ஒன்றாகும். நேரமின்மை காரணமாக மென்று பொறுமையாக சாப்பிடாமல், அவசரமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீண்ட நாட்கள் பதப்படுத்தி உணவுகளை சாப்பிடுவது கூடாது, இதுவும் உடலில் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும்.
சமைக்கும் காய்கறிகளை சரியாக கழுவாமல் சமைப்பது, மற்றும் சமைத்த உணவை முறையாக பாதுகாக்காமல் இருந்தாலும், ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
வயிறு வலி, வயிறு மந்தம் இவை முதல் அறிகுறியாகும். அடுத்ததாக குமட்டல், தலைவலி, ஜுரம் ஆகியவை ஏற்படுமாம். தீவிர ஃபுட் பாய்சன் என்றால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்படும்.
ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.