தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன.ஒரு முடி கெரட்டின் மற்றும் இறந்த சரும செல்களால் உருவாகிறது. ஒரே இரவில் உங்கள் தலைமுடி வேகமாக வளர நேரடி வழி இல்லை என்றாலும் தலைமுடியை ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வைத்திருக்கசில ஆரோக்கியமான விடயங்களை பின்பற்றலாம்.
இதற்கு முடி வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள எடுத்துக் கொள்ளுங்கள். உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
இந்த முடி உதிர்வதற்கு போதியளவு சாப்பிட முடியவில்லை என்றால் அதற்கு நாம் சில இயற்கை வழிமுறைகளையும் பின்பற்றலாம்.பின்வரும் பதிவில் இதற்கான வழிமுறையை பார்க்கலாம்.
இந்த முடி உதிர்விற்கு நெல்லிக்காய் மிகவும் உதவி புரியும்.நெல்லிக்காயில் செய்த எண்ணையில் வெதுவெதுப்பாக சூடாக்கி தலை மயிர்கால்களில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு வேர்களுக்கு தேவையான போஷாக்கு கிடைக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இதை இரவு நேரங்களில் தலையில் தடவி காலையில் கழுவலாம்.நெல்லிக்காயை பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துவது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கும்.
இந்த பேஸ்டை தலை முழுக்க பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.இதனை வாரம் ஒருமுறை செய்து வர தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைத்து, பொடுகு பிரச்சனை குறையும்.நெல்லிக்காயை ஜீஸாக செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து தலைமுடிக்கு அலச வேண்டும்.
இது மயிர்க்கால்களின் pH அளவுகளை சரி செய்து தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து அது நன்றாக கொதித்த பின் வடிகட்டி மயிர்கால்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
வாரத்திற்கு 3 முறை இதனை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு குறைந்து, அடர்த்தியான தலைமுடி கிடைக்கும். இதுபோன்ற வழிமுறைகளை செய்தால் கட்டாயம் மாற்றத்தை உணர்வீர்கள்.