அமெரிக்காவில் 3 வெவ்வேறு ஸ்பாக்களில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 6 ஆசிய பெண்கள் உட்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளோரிடா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் ஆசியர்கள் நடத்தி வரும் மசாஜ் பார்லர்களிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு அட்லாண்டா புறநகரான Acworth-ல் உள்ள மசாஜ் பார்லரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், நகரில் உள்ள மற்ற 2 ஸ்பாக்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய நரை கைது செய்துள்ளதாகவும், மூன்று தாக்குதல்களிலும் அவர் தான் சந்தேக நபர் என்று நம்பப்படுவதாக அதிகாரிக்ள தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கான எந்த நோக்கமும் இதுவரை நிறுவப்படவில்லை.

எனினும், அமெரிக்காவில் ஆசிய-அமெரிக்கர்கள் மீதான வெறுப்பு குற்றங்கள் சமீப மாதங்களாக அதிகாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா பரவுவதற்கு ஆசிய மக்கள் தான் காரணம் என வதந்திகள் பரவியதை தொடர்ந்து ஆசிய-அமெரிக்கர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தாக்கப்பட்ட, ஆசிய-அமெரிக்கர்களுக்கு எதிரான கொடூரமான வெறுப்புக் குற்றங்களை கண்டித்தார்.