ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறந்த ராசியில் கிரக நிலைகள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கிரக நிலைகளின் பிரகாரம் ஜோதிட கணிப்பின் அடிப்படையில் சுக்கரனின் முழுமையான ஆசியால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது.
இப்படி சுக்கிர பகவானால் 2025 இல் வாழ்வில் பொற்காலத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டு முழுவதும் உகலத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆசி முழுமையாக இருப்பதால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
வாழ்வில் முக்கிய விடயங்கள் நடைப்பெறப்போகும் ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமையப்போகின்றது.
இவர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத வகையில் மகிழ்ச்சியான திருப்பங்கள் நிகழப்போகின்றது.சமூபத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
வாகனம்,நிலமட போன்ற சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான அத்திவாரம் இந்த ஆண்டில் போடப்படும்.
கன்னி
கன்னி ராசியினர் சுக்கிரனின் ஆசியால், 2025-ல் செல்வச் செழிப்புடன் வாழப்போகின்றார்கள். இந்த ஆண்டில் நிதி ரீதியில் அசுர வளர்ச்சி உண்டாகும்.
இவர்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும் ஒரு சிறப்பான ஆண்டாக இச்த ஆண்டு அமையப்போகின்றது.
தொழில் மற்றும் வியாபார ரீதியில் புதிய முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு அதிகமான வருமானத்தை கொடுக்கும். பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சுக்கிரன் அமோகமான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றார்.
2025-ல் அதிகளவில் சாதக பலன்களை இந்த ராசியினர் அனுபவிக்கப்போகின்றார்கள். தொழில் விடயங்களில் காட்டும் அக்கறைக்கு ஏற்ற வருமானத்தை பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த ஆண்டில் பதிவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.மொத்தத்தில் சுக்கரன் அவர்களுக்கு பொன்னையும் பொருளையும் வாறிக்கொடுக்கப்போகின்றார்.