பொதுவாக தினம் சாப்பிடும் உணவுகளிலிருந்து சர்க்கரையை தவிர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
இப்படியான ஒரு நிலையில் ஒரு வாரத்திற்கு சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால் என்ன நடக்கும்? என்பதனை தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாக இருப்பார்கள்.
கூறுவதற்கு சிறிய விடயமாக இருந்தாலும் நிஜத்தில் செய்து பார்க்கும் போது ஏகப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அதுவும் டயட்டில் இருப்பவர்கள் உணவில் சர்க்கரையை சேர்க்காமல் ஒட்டுமொத்த உடல்நலனில் மாற்றம் எதிர்பார்க்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் ஒரு வாரத்திற்கு உணவில் சர்க்கரை சேர்க்காவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை பார்க்கலாம்.
1. சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.
2. சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஹார்மோன் தூண்டுதல் குறைக்கப்படுவதால், இனிப்பு பதார்த்தங்கள் மீது அதிகமாக நாட்டம் கொள்ள தோன்றாது.
3. பசி ஏற்படுவது குறையும். இதனால் உண்ட களைப்பு என்ற ஒரு விடயம் இல்லாமல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.
4. சர்க்கரை சேர்க்காமல் இருப்பதால் உடல் எடையும் கொழுப்பும் குறையும். அத்துடன் உடலில் கோர்த்துள்ள நீரின் எடை குறைந்து கொழுப்பின் அளவு குறையும்.
5. உணவில் சர்க்கரை சேர்க்கப்படாததால், உங்களின் அறிவாற்றல் விரிவடைகிறது. இதனால் மனநிலை தடுமாற்றம் இல்லாமல் இருக்கிறது. மேலும் கவனம் சிதறாமல் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த முடியும்.