வேத ஜோதிடத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன.

இந்த மாற்றங்களினால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது.

பஞ்சாங்கத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 2 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இரண்டு நட்பு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

இந்த சேர்க்கையானது சுமாராக 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த சேர்க்கை கும்ப ராசியில் இடம்பெறவுள்ளது.

ஜோதிடத்தில் நீதிமான் என அழைக்கப்படும் சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர், அடுத்த வருடம் ஆரம்பத்தில் புதனுடன் இணைகிறார்.

இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்பதால், சில ராசிக்காரர்கள் வேலை, வியாபாரம், நிதி தொடர்பான விஷயங்களில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அப்படியான ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள் | Saturn Mercury Conjunction 2025 Lucky Zodiac Signs

 மேஷம்  மேஷ ராசியில் பிறந்தவர்கள் சனி- புதன் சேர்க்கையால் 2025 ஆம் ஆண்டில் புதிய வருமான ஆதாரங்களுடன் மிளிர்வார்கள். இதன் மூலம் வலுவான நிதி மற்றும் வேலை கிடைக்கும். அத்துடன் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், வீட்டில் உள்ள பிள்ளைகள் படிப்பிலும், தொழிலிலும் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்த வாழ்க்கையும் பிரகாசமாக மாறும்.
மகரம்  மகர ராசியில் பிறந்தவர்கள் சனி- புதன் சேர்க்கையால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க போகிறார்கள். இவர்களின் உறவுகள் வலுவடைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். எழுத்து, ஊடகம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு சேரும் வாய்ப்பு உள்ளது. 2025 ஆம் ஆண்டில் சனி பகவானின் ஆசியால், இதுவரை தடைபட்டு இருந்த வேலைகள் அணைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
 கும்பம்  2025 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனி- புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை இவர்கள் அடுத்த வருடம் காண்பார்கள். அத்துடன் சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் ஏக்கத்துடன் இருக்கும் திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். சனி மற்றும் புதனின் ஆசியால் வாழ்க்கையில் வெற்றியும், செல்வமும் குவியும்.