ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரதமானது அவர்களின் எதிர்கால வாழ்ககையிலும் அவர்களின் விசேட ஆளுமையிலும் நேரடி தாக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு வருகின்ற ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கப்போகின்றது.
அப்படி கிரகங்களின் சாதக நிலையால் வாழ்வில் வெற்றிகளையும் செல்வத்தையும் குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிசப ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கதில் சனிபகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்.அதனால் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான வாய்பு அடையும்.
வருகின்ற ஆண்டில் இந்த ராசியினருக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவான சிந்தனையுடன் முன்னேற்ற பாதையில் பயணிக்க ஆரம்பிப்பீர்கள். மொத்தத்தில் வெற்றிகள் குவியப்போகும் சிறந்த ஆண்மாக 2025 அமையும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வாழ்வில் பல்வேறு சாதக மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.
வருகின்ற ஆண்டு தொழில் ரீதியிலும் நிதி ரீதியிலும் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை வீடு தேடி வரும்.
வியாபாரத்தில் ஈடுப்படுவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்களுக்கு. குடும்ப வாழ்வில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வெற்றிக்கான ஆண்டாக இருக்கும். வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டில் நடைபெறும்.
தொழில் விடயங்களில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.புதிய வணிக ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்பு அமையும்.
2025 முழுவதுமே பணத்துக்கு பஞ்சம் இருக்காது. உடல் நிலையிலும் உச்சாகம் பிறக்கும். இலக்கை நோக்கி ஆர்வத்துடன் வேலை செய்வீர்கள்.