ஆண்டிற்கு ஆண்டு நடைபெற்று வரும் கிரகப்பெயர்ச்சியில் ராகு பெயர்ச்சியும் ஒன்று. நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் கிரகங்களில் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்.
இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு கும்பராசி செல்கிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் 2025 ஆம் ஆண்டு பிரகாசமாக வாழப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
- உங்கள் ராசியில் முதல் வீட்டில் ராகு பயணம் செய்யப் போகின்றார்.
- கும்பத்தில் அதிபதியாக சனி பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா முன்னேற்றமும் கிடைக்கும்.
- நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும்.
- எதிரிகளுடன் இருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்கும்.
மேஷம்
- உங்கள் ராசியில் 11 வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
- இதனால் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
- உங்களுக்கு தேவையானவை நேர்மையான முறையில் கிடைக்கும்.
- நீங்கள் ஒரு கடின உழைப்பாளி என்பதால் அதனால் பெரும் பயன் பெறுவீர்கள்.
- அதிஷ்டம் அதிகமாக உங்களிடம் வந்தடையும்.
- எந்த விடயத்திலும் எந்த தடையும் இல்லாமல் எல்லாம் சுலபமாக முடியும்.
- காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
- உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
- வாழ்கையில் எதிர்பாராத புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும்.
- இதுவரை எதாவது ஒரு காரணத்தினால் முடியாத வேலைகள் தற்போது முடிவடையும்.
- பல சிரமமான விடயத்தில் இருந்து மீண்டு வருவீர்கள்.
- குடும்பத்தை விட்டு தொலை பயணம் செல்லும் வாய்ப்பு அதிகம்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.