நவக்கிரகங்களில் மிக முக்கியமாக விளங்குபவர் ராகு பகவான். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றி கொள்வார்.
இந்த ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்யும் அதேசமயத்தில் செவ்வாய் பகவானும் மீன ராசிக்குள் நுழைகிறார்.
இவர்கள் இருவரின் சேர்க்கை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் 12 வது வீட்டில் அங்காரகன் யோகம் உருவாகியுள்ளது. இதனால் நீங்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உடல் ஆராக்கியத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உறவினர்களால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை எற்படலாம் எனவே அந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிக கோபம் வந்தால் அதை கட்டுப்படுத்துவது நல்லது.
கன்னி
உங்கள்து 5 வது வீட்டில் அங்காரகன் யோகம் உருவாகியுள்ளதால் திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கல்கள் ஏற்படும்.
இந்த நேரத்தில் மனைவியுடன் கணவனுடன் வாக்குவாதம் பிரச்சனை வரும். மற்றவர்களுடன் பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யாருடனும் கூட்டு தொழில் முயற்சியில் இறங்க வேண்டாம். வியாபாரம் மற்றும் தொழில் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
உங்கள் ராசியில் 2 வது வீட்டில் அங்காரகன் யோகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவைப்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். வீண் பழியை சுமக்க நேரிடும் எனவே எந்த நேரத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.